உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி : மாத்திரை வாங்கும் இடத்தில் தேங்கும் கழிவு நீர் 

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகள் அவதி : மாத்திரை வாங்கும் இடத்தில் தேங்கும் கழிவு நீர் 

ராமநாதபுரம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.மருத்துவமனை புதிய கட்டடம் 5 தளங்களுடன் கட்டி பயன்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகிறது. 500 படுக்கைகள் கொண்ட இந்த கட்டடத்தில் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் இந்த கட்டடத்தில் உள்ளன.இங்கு வெளி நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வழங்கும் பகுதி மேல் தளங்களில் இருந்து வரும் கழிவு நீர் மாத்திரை வழங்கும் இடங்களில் தேங்கியுள்ளதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தப்பகுதியில் நோயாளிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர்.மருத்து, மாத்திரை வழங்கும் பணியாளர்களும் துர்நாற்றத்தில் அமர்ந்து பணிபுரியும் நிலை உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இப்பகுதியை சிமென்ட் சிலாப்புகள் மூலம் மூடி பாதுகாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை