உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகப்பேறு பிரிவில்  கழிப்பறை வசதியின்றி நோயாளிகள்   தவிப்பு 

மகப்பேறு பிரிவில்  கழிப்பறை வசதியின்றி நோயாளிகள்   தவிப்பு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் போதுமான கழிப்பறை வசதியின்றி நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் தவிக்கின்றனர்.இங்குள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு, சிசு தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சிக்கலான பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வார்டில் கழிப்பறைகள் சிலவற்றை பணியாளர்கள் பூட்டி வைத்து பயன்படுத்துகின்றனர். இதனால் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளும், அவருக்கு உதவியாளராக வருபவர்களுக்கும் போதுமான கழிப்பறை வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உரிய கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை