உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மன்னார் வளைகுடா தீவுகளில் ரோந்துப்பணி

மன்னார் வளைகுடா தீவுகளில் ரோந்துப்பணி

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நெடிய கடல் பரப்பைக் கொண்டது மன்னார் வளைகுடா கடற்கரை. மாவட்டத்தின் கடைசி எல்லையான ரோஜ்மா நகர் முதல் தனுஷ்கோடி வரை 140 கி.மீ., பரந்து விரிந்த கடலில் 21 தீவுகள் உள்ளன.மன்னார் வளைகுடா வன உயிரின காப்பாளராக முருகன் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவரது உத்தரவின் பேரில் மண்டபம், கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் மன்னார் வளைகுடா வனச்சரகத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வனச்சரக அலுவலகத்திற்கு சொந்தமான அதிக வேகத்திறன் கொண்ட நாட்டுப் படகுகள் தற்போது மூன்றில் இரண்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ரோந்து பணி நடக்கிறது. கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: தீவுகளை சுற்றிலும் காலை, மாலை நேரங்களில் ரோந்து பணி மேற் கொள்கிறோம். நடுக்கடலில் மீனவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக எங்களை அணுகலாம். ஆபத்தில் உள்ள மீனவர்களை கண்டறிந்து உடனடியாக மீட்பு பணிகள் மேற் கொள்ளப்படும். தீவுகளை உரிய முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.தீவுகள் மற்றும் அரிய வகை மன்னார் வளைகுடாவில் வசிக்கக்கூடிய கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை