மேலும் செய்திகள்
இப்படி இருந்தா... எப்படி பயணிப்பது!
10-Apr-2025
பார்க்க புதுசு; உள்ளே எல்லாமே பழசு!
10-Apr-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துாரில் இருந்து மதுரை, சென்னை, கோவை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்செந்துார், கும்பகோணம் உட்பட கிராமப் பகுதிகளுக்கு தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் செல்கின்றனர்.தற்போது கடந்த சில நாட்களாக முதுகுளத்துாரில் அவ்வப்போது மழை பெய்கிறது. முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பஸ்சிற்கு காத்திருக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். நடப்பதற்கு முகம் சுளிக்கின்றனர்.தேங்கிய தண்ணீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
10-Apr-2025
10-Apr-2025