உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மதுக்கடையை மூடுமாறு தாலுகா  அலுவலகத்தில் மக்கள் தர்ணா

மதுக்கடையை மூடுமாறு தாலுகா  அலுவலகத்தில் மக்கள் தர்ணா

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார்வலசையில் கலெக்டர் உத்தரவுப்படி அரசு மதுக்கடையை மூடாததை கண்டித்து மக்கள் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார்வலசையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை மூடக்கோரி ஜன.,30ல் எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் விமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்புடன் இணைந்து ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுக்கடை மூடப்பட்டது.இந்நிலையில் நேற்று மறைமுகமாக மதுபானக்கடையை திறந்து மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக புகார் தெரிவித்து அழகன்குளம் மக்கள், எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் விமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்பினர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தாசில்தார் சுவாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வேறு இடம் பார்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, விரைவில் மூடப்படும் என்றார். கடையை நிரந்தரமாக பூட்டாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என ஊர் மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை