உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காய்ச்சல் பரவலை தடுக்க தினமலர் செய்தியுடன் மனு

காய்ச்சல் பரவலை தடுக்க தினமலர் செய்தியுடன் மனு

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துாரை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த வலியுறுத்தி தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டிமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தார். மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருதால் தாழ்வான இடங்களில் கழிவு நீருடன் மழை நீரும் தேங்கியுள்ளது. கொசுத்தொல்லை அதிகரிப்பால் நோய் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக காய்ச்சலுக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி தினமலர் நாளிதழில் அக்.,19ல் செய்தி வெளியானது. அச்செய்தியுடன் சோழந்துாரை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கொசுத்தொல்லையால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தேவையுள்ள இடங்களில் கொசுமருந்து அடிக்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த அபேட் மருந்து ஊற்ற வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை