உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாவம் பயணிகள்...புதுப்பித்த பஸ்டாண்டில் அடிப்படை வசதிகளே இல்லை : இருக்கைகள் எங்கே, பெயரளவில் குடிநீர், கழிப்பறைகள்

பாவம் பயணிகள்...புதுப்பித்த பஸ்டாண்டில் அடிப்படை வசதிகளே இல்லை : இருக்கைகள் எங்கே, பெயரளவில் குடிநீர், கழிப்பறைகள்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை பயணிகள் அமர்ந்திருப்பதற்கான இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. பெயரளவில் குடிநீர் வருகிறது. கழிப்பறைகள் துாய்மையின்றி துர்நாற்றம் வீசுவதால் பாவம் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கட்டடம் பழுது, போதிய இடவசதியின்மையால் 2023 ஆக.,3 முதல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வந்த முதல்வர் ஸ்டாலின் அக்.,3ல் திறந்து வைத்தார். அதன் பிறகு அக்.,8 முதல் பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் இடங்களில் இருக்கை வசதியின்றி முதியவர்கள், மாற்றத்திறனாளிகள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் அவதிக்குள்ளாகின்றனர். குடிநீர் வசதியும் சில இடங்களில் பெயரளவில் வைத்துள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் தொடர் பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. உருப்படியாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ரூ.20 கோடி செலவழித்து பெரிய வணிக வளாகம் போன்று நிறைய கடைகள் தான் கட்டியுள்ளனர். அவற்றை நடத்த ஆள் கூட கிடைக்காமல் மீண்டும் மறு ஏலமிட நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இவ்விஷயத்தில் வருமானம் ஈட்ட ஆர்வம் காட்டும் நகராட்சி அதிகாரிகள் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் புதிய பஸ் ஸ்டாண்டில் உடனடியாக இருக்கை வசதிகள் அமைத்தும், கூடுதலாக குடிநீர் தொட்டிகள் வைக்க வேண்டும். தொடர்ந்து தினமும் பல முறை கழிப்பறைகளை சுத்தம் செய்ய பணியாளர்களை நியமித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி