உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பாலைக்குடி சிறுவர் பூங்காவை சீரமையுங்கள்

திருப்பாலைக்குடி சிறுவர் பூங்காவை சீரமையுங்கள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி பாண்டி நகர் பகுதியில் கடந்த ஆட்சியின் போது சிறுவர்கள் பயனடையும் வகையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டன. இதனால் சிறுவர்கள் பயனடைந்தனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பூங்கா முறையாக பராமரிப்பு செய்யப்படாததன் காரணமாக பூங்காவில் சீமைக்கருவேல மரப்புதர்கள் சூழ்ந்துள்ளதால் சிறுவர்கள் பூங்காவை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறுவர் பூங்காவை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை