உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்ச்சில் பொங்கல் விழா

சர்ச்சில் பொங்கல் விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரெகுநாதமடை செபஸ்தியார் சர்ச்சில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.முன்னதாக கால்நடை வளர்க்கும் குடும்பத்தினர் சர்ச் வளாகத்தில் ஒன்றுகூடி நீண்ட வரிசையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பொங்கல் பானைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்பு கிராம பகுதியில் உள்ள கால்நடைகளை அனைத்தும் சர்ச் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டு, கால்நடைகளின் கழுத்தில் கரும்பு, கிழங்கு உள்ளிட்டவைகளை கட்டி மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை