உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் அரசு சுவர்களின் அழகை கெடுக்கும் போஸ்டர்

பரமக்குடியில் அரசு சுவர்களின் அழகை கெடுக்கும் போஸ்டர்

அந்தந்த துறையினர் கவனிக்கலாமேபரமக்குடி: பரமக்குடியில் அரசு அலுவலக சுவர்களின் மீது போஸ்டர்களை ஓட்டுவதால் நகரின் அழகு கெட்டுள்ளது.திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள், கோயில் விழாக்கள், இறப்பு நிகழ்வுகள், வணிக விளம்பரங்கள் என அனைத்திற்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. போஸ்டர்களை ஒட்ட பொது சுவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.முன்பு சினிமா தியேட்டர்கள் இருந்த போது ஒவ்வொரு பகுதியிலும் போஸ்டர்களை ஓட்டுவதற்கு என்று சாக்கு பேனர்களை கட்டி வைத்திருந்தனர். தொடர்ந்து வீட்டு சுவர்களில் ஒட்டுவது அதிகரித்தது. ஆனால் வீடு மற்றும் தனியார் நிறுவனங்கள் என தற்போது டைல்ஸ் கற்கள் ஒட்டுவது மற்றும் போஸ்டர்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தாலுகா அலுவலகம் துவங்கி நகராட்சி, நீதிமன்ற வளாகங்கள், பொதுப்பணித்துறை என அனைத்து அரசுத் துறை சுவர்களிலும் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்துள்ளது.மேலும் பாலங்களின் மீதும், பில்லர்களின் மீதும் ஒட்டி வைக்கின்றனர். ஆகவே இது போன்ற நகரின் அழகை கெடுக்கும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்தத் துறை அதிகாரிகள் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை