மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
2 hour(s) ago
விழிப்புணர்வு
6 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
6 hour(s) ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மின் டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.ராமேஸ்வரம் துறைமுக வீதியில் மீன் இறக்கும் பாலம் நுழைவில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் மின் கம்பம் உப்பு காற்றில் அரித்து சேதமடைந்த நிலையில் உள்ளதால், சூறாவளி காற்று வீசினால் உடைந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இந்த துறைமுக வீதி சாலையில் தினமும் ஏராளமான மீனவர்கள், வாகனங்கள் வந்து செல்கிறது. இச்சூழலில் சேதமடைந்த மின் டிரான்ஸ்பார்மர் கம்பத்தை மாற்றி புதிய கம்பம் பொருத்திட மீனவர்கள் பலமுறை மின்வாரிய அதிகாரியிடம் வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.இருப்பினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அருகில் புதியதாக மின்கம்பங்கள் பொருத்தியும், டிரான்ஸ்பார்மரை மாற்றவில்லை. எனவே விபத்திற்கு முன்பாக சேதமடைந்த கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago