கீழக்கரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
கீழக்கரை: கீழக்கரையில் நேற்று முன் தினம் இரவு தனியார் பஸ்ஸின் கண்ணாடியை மர்ம நபர்கள் கற்களை எரிந்து சேதப்படுத்தினர். ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்துார் செல்ல, கீழக்கரை நகருக்குள் வந்து செல்லும் தனியார் பஸ் அங்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கிவிட்டு வெளியே வரும்பொழுது மது அருந்திய மர்மநபர்கள் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். அதற்கு முன்பாக ஒரு காரின் கண்ணாடியை உடைத்து விட்டு டூவீலரில் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பஸ்ஸில் பயணம் செய்த ஒரு சிறுமி மற்றும் மூன்று பேருக்கு கண்ணாடி சிதறலால் காயம் ஏற்பட்டது. கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தனியார் பஸ்ஸின் மேலாளர் அழகர்சாமி அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.