உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரவில் மாணவி பாதுகாப்பிற்காக பஸ்சை நிறுத்தி காத்திருந்த டிரைவர், கண்டக்டர் :பொது மக்கள் பாராட்டு

இரவில் மாணவி பாதுகாப்பிற்காக பஸ்சை நிறுத்தி காத்திருந்த டிரைவர், கண்டக்டர் :பொது மக்கள் பாராட்டு

ராமநாதபுரம்:மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் இரவில் பயணித்த மாணவி ஒருவரின் பாதுகாப்பு கருதி பெற்றோர் வரும் வரை பஸ்சை நிறுத்தி காத்திருந்த டிரைவர், கண்டக்டரின் மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர்.நவ.,30 இரவு மதுரையிலிருந்து அரசு பஸ் ராமேஸ்வரம் சென்றது. ராமேஸ்வரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பேக்கரும்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தேசிய நினைவகம் பஸ் ஸ்டாப்பில் சட்டக்கல்லுாரி மாணவி ஒருவர் இரவு 10:30 மணிக்கு இறங்க தயாரானார். அப்போது கண்டக்டர் முத்துராமலிங்கம், டிரைவர் அந்தோணிராஜ் காலம் கெட்டுக்கெடுக்குது தனியாக இறக்கி விட முடியாது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி கொள் என்று கறாராக கூறினர்.மாணவியோ அவரது பெற்றோரிடம் அலைபேசியில் பேசினார். அவர்கள் 15 நிமிடங்களில் வந்து விடுவதாக கூறினர். அப்போதும் காலம் கெட்டு கிடக்குது, பெண் குழந்தையை பாதுகாப்பாக பார்க்க வேண்டும் என்று டிரைவர், கண்டக்டர் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதையடுத்து பத்து நிமிடங்கள் காத்திருந்து மாணவியின் சித்தப்பா வந்து அவரை அழைத்து செல்லும் வரை பஸ்சை நிறுத்தினர். இதற்காக கண்டக்டர், டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை