உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மழையால் வரத்து குறைவு கருவாடு விலை உயர்வு நெத்திலி கிலோ ரூ.600

 மழையால் வரத்து குறைவு கருவாடு விலை உயர்வு நெத்திலி கிலோ ரூ.600

ராமநாதபுரம்: சில நாட்களாக மேக மூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ராமேஸ்வரம், திருப்பாலைக்குடி, பாம்பன் பகுதியில் கருவாடு உற்பத்தி மற்றும் மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் கருவாடு கிலோவிற்கு 50 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், திருப்பாலைக்குடி பகுதிகளிலிருந்து மீன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில நாட்களாக புயல் காரணமாக மழை பெய்துள்ளது. கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற வானிலை மையம் அறிவிப்பால் மீனவர்கள் கடலுக்குள் செல்வது குறைந்துள்ளது. இதன் காரணமாக மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கருவாடு உலர்த்தும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் கிடைக்காததால் கன்னியாகுமரி, நாகர்கோவில், துாத்துக்குடி பகுதிகளிலிருந்து வரும் மீன் கருவாடு ராமநாதபுரத்தில் விற்கப்படுகிறது. உள்ளூர் வரத்தின்றி கடந்த மாதம் ரூ.400க்கு விற்ற நெத்திலி மீன் கருவாடு தற்போது கிலோ ரூ.600 வரையும், இதே போன்று காரை, நகரை, பன்னா, திருக்கை உள்ளிட்ட கருவாடுகள் கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை