உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் மழை

ஆர்.எஸ்.மங்கலத்தில் மழை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் உழவுப் பணியை மேற்கொள்வதற்கு போதிய ஈரப்பதம் நிலவுகிறது. ஆடி மாதம் துவங்கியது முதல் விவசாயிகள் விளை நிலங்களில், நெல் விதைப்பை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது பெய்த மழையால் மேலும் உழவு பணிகள் தீவிரமடைந்து விரைவில் நெல் விதைப்பு பணி துவங்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை