உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நிலமோசடி பத்திர பதிவு ரத்து இல்லை நிலத்தை இழந்தவர்கள் குழப்பம்

நிலமோசடி பத்திர பதிவு ரத்து இல்லை நிலத்தை இழந்தவர்கள் குழப்பம்

ராமநாதபுரம் : தமிழகத்தில் நிலமோசடி வழக்குப்பதிவு அதிகரித்த அளவில் பத்திரப்பதிவு ரத்து ஆகாததால், நிலத்தை இழந்தவர்கள், மோசடியாளர்களின் செயல்கள் குறித்து அச்சமாகவே உள்ளனர். 'தமிழகத்தில் நிலமோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, நிலம் மீட்டு தரப்படும்,' என முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, நிலத்தை இழந்தவர்கள் நிலங்களை மீட்க, நிலமோசடி தடுப்பு பிரிவில் புகார் செய்து வருகின்றனர். அதனடிப்படையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் முதல் பலர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு, கைது போன்ற நடவடிக்கைகள் இருந்தாலும், பல மாவட்டங்களில் இன்னும் அபகரிப்பு செய்தவர்கள் பெயரிலேயே நிலம் உள்ளன. நிலத்தை இழந்தவர்கள், 'தி.மு.க.,வினர் தங்கள் மீது பழிவாங்கும் எண்ணத்தில், நிலம் கிடைக்காத வகையில் வேறு நபர்கள் பெயரில், கோர்ட் வழக்குகளில் இறங்கி பதிவை ரத்து செய்ய விடாமல் தடுப்பார்களோ' என்ற, அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''மதுரை, ராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களில் நிலமோசடி தொடர்பான நிலபத்திர பதிவுகள் ரத்தாகவில்லை. நிலஅபகரிப்பு புகார்கள் மேல் முழுவிசாரணை முடிந்து கோர்ட் உத்தரவு வந்தபின் தான் மோசடியாக பதிவான பத்திர பதிவு ரத்து செய்யப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை