உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில  ஹாக்கியில் தங்கம் வென்ற ராமநாதபுரம் அணி

மாநில  ஹாக்கியில் தங்கம் வென்ற ராமநாதபுரம் அணி

ராமநாதபுரம்; முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு விடுதிமாணவர்கள் அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கிப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் அணியினர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் கோப்பை, பதக்கம், சான்றிழ்களுடன் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி