உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுாலக வாசிப்பு அறையில் கிடக்கும் புத்தக பண்டல்களால்  வாசகர்கள் பாதிப்பு;   பிரித்து கிளை நுாலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்

நுாலக வாசிப்பு அறையில் கிடக்கும் புத்தக பண்டல்களால்  வாசகர்கள் பாதிப்பு;   பிரித்து கிளை நுாலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நுாலக வளாகத்தில் புத்தக பண்டல்களை வைக்க இடமின்றி படிக்கும் அறையில் வைத்துள்ளதால் வாசகர்கள் பாதிக்கப்படுகின்றனர். விரைவில் கிளை நுாலகங்களுக்கு புத்தகங்களை அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி-பிளாக் பஸ் ஸ்டாப் அருகே 1991 ல் மாவட்ட நுாலகம் துவக்கப்பட்டது. இதன் கீழ் பரமக்குடி, ராமேஸ்வரம் உட்பட மாவட்டத்தில் மைய நுாலகம், கிளை நுாலகம் என 88 நுாலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக மாவட்ட நுாலகர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது முதன்மை நுாலகர் கூடுதல் பொறுப்பாக பணிபுரிகிறார். போதுமான இடவசதியின்றி நெருக்கடியில் நுாலகம் செயல்படுகிறது. இதன் காரணமாக கிளை நுாலகங்களுக்கு வரும் புத்தகங்களை வைக்க சிரமம் ஏற்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கிளை நுாலகங்களுக்கு அனுப்புவதற்காக பல ஆயிரம் புத்தகங்கள் பண்டல்களாக வந்துள்ளன. இவற்றை வைக்க இடமின்றி படிக்கும் அறை வளாகத்தில் குவித்துள்ளதால் வாசகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நுாலகத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுாலகத்துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய புத்தகங்கள் மொத்தமாக அனுப்பப்படாமல் சிறிது, சிறிதாக அனுப்புவதால் அவற்றை உடனடியாக பிரித்து கிளை நுாலகங்களுக்கு அனுப்ப முடியவில்லை. விரைவில் மீதி புத்தகங்கள் வந்தவுடன் கிளை நுாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நுாலகத்திற்கு கூடுதலாக கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி