உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புறவழிச்சாலை ரவுண்டானாவில் உயர்கோபுர விளக்கு கோரிக்கை

புறவழிச்சாலை ரவுண்டானாவில் உயர்கோபுர விளக்கு கோரிக்கை

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலை ரவுண்டானா இருளில் மூழ்கியதால் விபத்து ஏற்படாமல் தடுக்க உயர்மின் கோபுரம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.முதுகுளத்துார் -பரமக்குடி ரோட்டில் இருந்து செல்வநாயகபுரம் விலக்கு ரோடு வரையும் , முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து நீதிமன்றம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இங்கு ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். ஒருசில நேரங்களில் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் புறவழிச்சாலை ரவுண்டானாவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை