உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பயிர் காப்பீடு காலத்தை நீட்டிக்க கோரிக்கை 

 பயிர் காப்பீடு காலத்தை நீட்டிக்க கோரிக்கை 

ராமநாதபுரம்: விவசாயிகள் பயிர் காப்பீடுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நவ.,30 வரை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. மழை பாதிப்பு, இயற்கை சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்படும் போது தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு தொகை உதவுகிறது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு சார்ந்த ஆவணங்களை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே நெற்பயிர் காப்பீட்டு பதிவு தேதியை நவ.,30 வரை நீட்டிக்க வேண்டும் எனத் தெரி வித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ