உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் விரைவில் நடத்த வலியுறுத்தல் ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் விரைவில் நடத்த வலியுறுத்தல் ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பரமக்குடி: பரமக்குடியில் நடந்த தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்த வலியுறுத்தப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் திருலோகசந்தர் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசங்கர் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் அப்துல்நஜ்முதீன், விஜயராமலிங்கம், பொருளாளர் மணிகண்டன் செயல் மற்றும் நிதிநிலை அறிக்கை வாசித்தனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கூட்டுறவுத் துறையில் அனைத்து பணியிடங்களுக்கும் பதவி உயர்வின் போது கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு வழங்க வேண்டும். இளநிலை ஆய்வாளர்களுக்கு முதுநிலை பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பாலமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ