உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திடீர் மழையால் நெல் விவசாயிகள் கலக்கம்: விளைந்த கதிர் வீணாகும் அபாயம்

திடீர் மழையால் நெல் விவசாயிகள் கலக்கம்: விளைந்த கதிர் வீணாகும் அபாயம்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை, ஆர்.எஸ்.மங்களம் தாலுகாவில் பெய்து வரும் சாரல் மழையால் விளைந்த நெற்கதிர்கள் வீணாகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பெரும்பாலான கிராமங்களில் மகசூல் சூழ்நிலையை எட்டியுள்ளன. மேலும் பெரும்பாலான கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி மாறுகால் பாய்ந்து வருவதால் விளைந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் விவசாயிகள் விளைந்த கதிர்களை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றுவதில் பெரும் சவாலை சந்தித்து வரும் நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும், மேலும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்ற அறிவிப்பாலும் நெல் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் இன்னும் சில வாரங்களில் நெல் அறுவடை மேற்கொள்ளும்வகையில் கதிர்கள் விளைச்சல் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் கன மழை பெய்தால் நெல் விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் விவசாயிகள் அதிக நஷ்டம் அடையும் நிலை உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி