மேலும் செய்திகள்
ஆனந்துார் பகுதியில் நெல் விதைப்பு பணி துவக்கம்
31-Aug-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை அலுவலகத்தில், 50 சதவீத மானிய விலையில் விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், ஆண்டுதோறும் 23 ஆயிரம் எக்டேரில், நெல் சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு உழவுப் பணிகள் முடிந்து விதைப்பு பணிகள் துவங்கியுள்ளன. விவசாயிகள் பயனடையும் வகையில், வேளாண்மை அலுவலகத்தில் அதிக மகசூலை ஈட்டி தரும், பி.பி.டி., ஆர்.என். ஆர்., என்.எல்.ஆர்., விதை நெல் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தி விதை நெல் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. இது தவிர பாரம்பரிய விதைகளான துாயமல்லி, சீரக சம்பா விதைகளும் கையிருப்பில் உள்ளன. இவைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு மானிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விதை நெல் மற்றும் இடுபொருட்களை வாங்கி பயனடைமாறு, ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சுப்ரியா தெரிவித்துள்ளார்.
31-Aug-2025