உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தேங்காய் விலை உயர்வால் உணவு தயாரிப்பில் பாதிப்பு

 தேங்காய் விலை உயர்வால் உணவு தயாரிப்பில் பாதிப்பு

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் தேங்காய் விலை உயர்வு மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் முக்கியமான உணவு பொருளாக உள்ளது. சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது போல் கோயில்களில் பூஜைக்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. சமீப நாட்களாக தேங்காய் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மக்கள் கூறுகையில், சுவையான உணவிற்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோயில்களில் அர்ச்சனை செய்ய தேங்காய் முக்கிய தேவையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.20 முதல் 40 வரை விற்றது. தற்போது ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. என்றனர். வியாபாரிகள் கூறுகையில், வெளி மாவட்டங்களில் தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி பாதிப்பால் சந்தைகளுக்கு தேங்காய் வரத்து குறைந்துள்ளது. இந்நிலை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ