உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைகை ஆற்றில் சேதமடைந்த தரைப்பாலத்தால் விபத்து அபாயம்

வைகை ஆற்றில் சேதமடைந்த தரைப்பாலத்தால் விபத்து அபாயம்

சீரமைக்க வலியுறுத்தல்பரமக்குடி,: பரமக்குடி வைகை ஆறு தரைப்பாலம் உடைந்த நிலையில் அங்கு மாணவர்கள் உட்பட பொதுமக்கள் குளிப்பதால் விபத்து ஏற்பட வாய்புள்ளது. பரமக்குடி ஆற்றுப்பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து கட்டப்பட்டது. அப்போது பழைய பாலத்தை இடித்த நிலையில், இரண்டு ஆண்டுகள் வரை அருகில் தற்காலிக தரைப்பாலம் அமைத்து போக்குவரத்து மாற்றப்பட்டது.இந்நிலையில் புதிய ஆற்றுப்பாலம் திறக்கப்பட்டாலும் பழைய தரைப்பாலமும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இப்பாலம் சிமென்ட் குழாய்கள் வைக்கப்பட்டு, அதன் மீது செம்மண் கொட்டி அமைக்கப்பட்டது. பலமுறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளால் பாலம் முற்றிலும் உடைந்து பயன்பாட்டில் இருந்து விலகியது. இப்பகுதியில் கடந்தாண்டு குளித்த பொழுது பள்ளத்தில் சிக்கிய ஒருவர் பலியானார். தற்போதும் மாணவர்கள், பொதுமக்கள் நாள் முழுவதும் குதித்து விளையாடி குளிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் உயிர்பலி அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், முற்றிலும் அதனை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை