உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மின்சார துண்டிப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் சாலை மறியல்

 மின்சார துண்டிப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் சாலை மறியல்

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சரி செய்யாததை கண்டித்து தனுஷ்கோடி சாலையில் மக்கள் மறியல் செய்தனர். ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் ராஜகோபால் நகரில் மரம் முறிந்து 4 மின்கம்பங்கள் விழுந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக ராஜகோபால் நகர், அப்துல்கலாம் நகர், பெரிய பள்ளிவாசல் தெரு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். நேற்று உடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் ஊன்றினர். இருப்பினும் நேற்று மாலை வரை மின்சார இணைப்பு கொடுக்கவில்லை. இப்பணிகள் தாமதமாக நடந்ததை கண்டித்து நேற்றிரவு தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.ஐ., வெள்ளைதங்கம் சமரசம் செய்ததும் மறியலை மக்கள் வாபஸ் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ