உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரத்தில் குண்டும் குழியுமாக சாலை: டிராபிக் போலீசார் முறையீடு

 ராமேஸ்வரத்தில் குண்டும் குழியுமாக சாலை: டிராபிக் போலீசார் முறையீடு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை சீரமைக்குமாறு போக்குவரத்து போலீசார் நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினர். ராமேஸ்வரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. திட்டக்குடி தெரு, ராமநாதசுவாமி நகர், பழைய போலீஸ்லைன் தெரு, ஜெ.ஜெ., நகர் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தரமின்றி அமைத்த தார் சாலைகள் தற்போது பல இடங்களில் சேதமடைந்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை கூட்ட நெரிசலை தவிர்க்க காட்டுபிள்ளையார் தெரு, ஜல்லிமலை தெரு, சவுந்தரி அம்மன் கோயில் தெரு, ராமநாதசுவாமி நகர் வழியாக கோயில் கார் பார்க்கிங் பகுதிக்கு போக்குவரத்து போலீசார் திருப்பி விடுகின்றனர். ஆனால் இப்பகுதியில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனுள் வாகனங்கள் சிக்கி டயர்கள் வெடித்து பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிபடுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த சாலையை புதுப்பிக்க இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. போலீசார் கடிதம் இந்நிலையில் பக்தர்கள் நலன் கருதி சேதமடைந்த இப்பகுதி சாலைகளை சரி சீரமைக்குமாறு ராமேஸ்வரம் போக்குவரத்து போலீசார், நகராட்சி கமிஷனருக்கு கடிதம் கொடுத்து வலியுறுத்தினர். சாலையை சரி செய்ய போக்குவரத்து போலீசாரே கெஞ்சி கூத்தாடும் அவல நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி