மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
2 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கடை வழங்க கோரி சாலையோர வியாரிகள் சங்கம் சார்பில், நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் முத்துவிஜயன் தலைமை வகித்து கூறியதாவது: ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையோர வியாபாரம் செய்ய நகராட்சியால் அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. தற்போது புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்தது முதல் வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்றார். நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆலடீஸ்வரன், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் பச்சமாள், கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
2 minutes ago