மேலும் செய்திகள்
ஜமாபந்தி நிறைவு
24-May-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் டூவீலர் ஒட்டி போலீசில் சிக்கிய சிறுவர்களுக்கு போலீசார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் அதிகளவில் டூவீலர் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி வருவது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷாம் தலைமையிலான போலீசார் ஆர். எஸ்.மங்கலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இதில் டூவீலர் ஒட்டிய இரண்டு சிறுவர்கள் போலீசில் சிக்கிய நிலையில் அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.சிறுவர்களுக்காக அபராதத் தொகையை செலுத்திய சிறுவர்களின் பெற்றோர் இனிமேல் இது போன்ற தவறு நடக்காது என போலீசில் உறுதிமொழி கடிதம் அளித்து சிறுவர்களை அழைத்துச் சென்றனர்.மே மாதம் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 31 பேர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தனர். இது போன்ற நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
24-May-2025