உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி பேரூராட்சி வரி பாக்கி செப்.30க்குள் செலுத்த வேண்டும்

சாயல்குடி பேரூராட்சி வரி பாக்கி செப்.30க்குள் செலுத்த வேண்டும்

சாயல்குடி,: சாயல்குடி பேரூராட்சியில் வரி பாக்கியை மக்கள் செப்.30க்குள் செலுத்த வேண்டும் என அறவிக்கப்பட்டுள்ளது.பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ஏராளமான கடைகள், வீடுகள் உள்ளன. உரிய சொத்து வரியை பொதுமக்கள் ஆண்டிற்கு இரண்டு முறையாக பேரூராட்சியில் செலுத்தலாம். ஏப்.1ம் தேதி முதல் செப்.30 வரை முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும்.அக்.1 முதல் மார்ச் 31 வரையிலான இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை மார்ச் 31க்குள் கட்டி முடிக்க வேண்டும். இதன்படி பேரூராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் சொத்து வரி வசூலிப்பது வழக்கமான நடைமுறை.சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி கூறுகையில் 2024 -25ம் நிதியாண்டிற்கு முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை பொதுமக்கள் செப்.30க்குள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டி முடிக்காத உரிமையாளர்களிடம் சொத்து வரியுடன் கூடுதலாக ஒரு சதவீதம் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.எனவே அதனை தவிர்க்க பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை விரைவாக அபராதமின்றி செலுத்தலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை