உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஈட்டி, குண்டு எறிதலில் தேசிய போட்டிக்கு தேர்வு

 ஈட்டி, குண்டு எறிதலில் தேசிய போட்டிக்கு தேர்வு

பரமக்குடி: பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி மினு சஞ்சனா. இவர் 19 வயதிற்கு உட்பட்ட தடகள போட்டியில் பங்கேற்றார். தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாநில போட்டிகள் நடந்தன. இதில் 35 மீ.,ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். இதே போல் 11.94 மீ., குண்டு எறிந்து வெண்கலம் வென்றார். மாணவி ஹரியானா மாநிலத்தில் நடக்கும் தேசியப் போட்டிக்கு தேர்வாகினார். இவரை தலைமை ஆசிரியர் சரோஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் குழந்தை தெரசா, பாரதி ஞானராணி, பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்