உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாலிபர் வயிற்றில் பாய்ந்த சில்வர் செம்பு துகள்கள்: பட்டாசு வெடித்த போது விபரீதம்

வாலிபர் வயிற்றில் பாய்ந்த சில்வர் செம்பு துகள்கள்: பட்டாசு வெடித்த போது விபரீதம்

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் கமலா நேரு நகர் பகுதியில் இளைஞர்கள் விளையாட்டுப் போக்கில் சில்வர் செம்புகளை கவிழ்த்து வைத்து பட்டாசுகளை வெடிக்க செய்தனர். அப்போது திடீரென செம்பின் ஒரு பகுதி வெடித்து சிதறி அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் குமார் 24, வயிற்றில் பாய்ந்தது.அவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.டாக்டர்கள் வயிற்றிலிருந்த செம்பின் துகளை அகற்றினர். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை