உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் மார்ச் 1ல் சிவராத்திரி விழா கொடியேற்றம்

ராமேஸ்வரம் கோயிலில் மார்ச் 1ல் சிவராத்திரி விழா கொடியேற்றம்

ராமேஸ்வரம்:மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்ச் 1ல் திருவிழா கொடி ஏற்றப்படுகிறது.இக்கோயிலில் ஆடித்திருக்கல்யாணம், தை அமாவாசை, மாசி சிவராத்திரி முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மாசி சிவராத்திரி விழாவிற்காக கோயிலில் சுவாமி சன்னதி முன் உள்ள கொடிக் கம்பத்தில் மார்ச் 1ல் திருவிழா கொடி ஏற்றப்படுகிறது.இதனைத் தொடர்ந்து மார்ச் 12 வரை இத்திருவிழா நடக்கும். முக்கிய விழாவாக மார்ச் 3ல் சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளல், மாசி சிவராத்திரியான மார்ச் 8ல் பகல், இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மார்ச் 9ல் சுவாமி, அம்மன் திருத்தேரில் எழுந்தருளி மாசி தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 10ல் மாசி அமாவாசையையொட்டி அக்னி தீர்த்த கடலில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது என இணை கமிஷனர் சிவராம் குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை