மேலும் செய்திகள்
வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
30-Dec-2024
கல்லுாரியில் தேசிய கணித நாள் விழா
12-Jan-2025
கீழக்கரை : கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 300 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடந்தது.கல்லுாரி தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் மேம்பாடு என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 3 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து 6 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மின்னியல் மின்னணுவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் சேக் தாவூது தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேஷ் குமார் பயிற்சி முகாமின் அறிக்கை வாசித்தார். மின்னணுவியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மரைன் துறை தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
30-Dec-2024
12-Jan-2025