உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நாளை (ஏப்.,5) பரமக்குடி, ராமநாதபுரத்தில் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா கூறியிருப்பதாவது:மின்நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நாளை (ஏப்.5ல்) காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.மின் கட்டண குறைபாடுகள், பழுதான மின் அளவிகளை மாற்றம் செய்வது, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றம் செய்வது, குறைந்த மின் அழுத்தம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து மக்கள் பயன்பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை