உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு

கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வனப்பகுதியில் இரை மற்றும் தண்ணீர் தேடி வந்த 5 வயதுள்ள ஆண் புள்ளிமான் சாலையை கடக்க முயன்றது.அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனங்களை கண்டு மிரண்டு ஓடிய புள்ளிமான் சாலையோர இரும்பு கம்பி வேலியில் மோதி தலையில் காயமடைந்து உயிரிழந்தது.சாயல்குடி வனச்சரகத்தினர் இறந்த புள்ளிமானை உடல் பரிசோதனை செய்து வனச்சரக வளாகத்தில் குழி தோண்டி புதைத்தனர். எஸ்.தரைக்குடி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்மாய் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் அதிகம் புள்ளிமான்கள் வாழ்கின்றன. இவற்றை வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை