உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நவ.22ல் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 

 நவ.22ல் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 

திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் தனியார் பள்ளியில் நவ.,22 ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. சுகாதாரத்துறையினர் கூறியதாவது: திருவாடானை சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். இதயம், சிறு நீரகம், நரம்பியல், கண், காது, மூக்கு, தொண்டை, போன்ற அனைத்து வகையான நோய்களுகான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கபடும். உடல் பரிசோதனைகளும் செய்யப்படும். எனவே திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ