உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாணவி கொலை வழக்கு வாலிபருக்கு குண்டாஸ்

 மாணவி கொலை வழக்கு வாலிபருக்கு குண்டாஸ்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ராமேஸ்வரம் சேராங்கோட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஷாலினியை அதே தெருவை சேர்ந்த முனியராஜ் 21, ஒரு தலையாக காதலித்தார். காதலை ஏற்க மாணவி மறுத்ததால் நவ.,19ல் பள்ளிக்குச் சென்ற ஷாலினியை, முனியராஜ் கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை சிறையில் உள்ள முனியராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சந்தீஷ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில் நேற்று ராமேஸ் வரம் துறைமுகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து முனியராஜை மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்