உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் சிரமம்

 பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் சிரமம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். முதுகுளத்துார் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வகுப்பறையில் தண்ணீர் தேங்கி ஒழுகுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கணினி, உபகரணங்கள் அனைத்தும் மழைநீரில் நனைந்து வீணாகி உள்ளது. இதனை பாதுகாப்பதற்காக தார் பாயால் மூடி வைக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. மாவட்ட அதிகாரிகள் வகுப்பறை மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை