உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் ராமேஸ்வரத்தில் சிக்கினர்

காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் ராமேஸ்வரத்தில் சிக்கினர்

ராமநாதபுரம்:- காதலை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய ஊட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவர், 15 வயது மாணவியை ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வலர்கள் மீட்டனர்.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமான நிலையில் 15 வயது சிறுமி, 17 வயது சிறுவன் நின்று கொண்டிருந்தனர். அங்கிருந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகினை சேர்ந்த தன்னார்வலர்கள் இருவரிடமும் விசாரித்தனர். அவர்கள் ஊட்டியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவரும், 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படித்த மாணவி எனத்தெரியவந்தது. இருவரும் காதலித்துள்ளனர். காதல் தெரியவந்ததால் பெற்றோர் கண்டித்தனர்.இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆசையில் ஊட்டியிலிருந்து பஸ்சில் ராமேஸ்வரத்திற்கு வருந்தது தெரியவந்தது. இருவரையும் ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் ஊட்டி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்து, இருவருக்கும் அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை