உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலாய்குடியில் நீரில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் கவலை

மேலாய்குடியில் நீரில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் கவலை

பரமக்குடி : பரமக்குடி அருகே மேலாய்குடி கிராமத்திற்கு உட்பட்ட விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஆடி மாதம் தொடங்கி பருவமழை இன்றி விவசாயிகள் கவலையில் இருந்தனர். இதனால் நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகி வந்தது தொடர்ந்து ஒரு மாதமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிய நிலையில் மாவட்டம் முழுவதும் மழை பொழிவு உள்ளது. இந்நிலையில் பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்கிறது.ஏற்கனவே வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு சில கண்மாய்களுக்கு சென்றடைந்துள்ளது. இதன்படி மேலாய்குடி பெரிய கண்மாய், தேவரேந்தல், பாரிவேந்தல் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் கடந்த ஒரு வாரமாக கனமழையின் காரணமாக நிரம்பி உள்ளது.இதனால் அப்பகுதிகளுக்குட்பட்ட 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், மிளகாய் என நீரில் மூழ்கியுள்ளது. மேலும் அருகில் உள்ள கிராமப் பகுதிகள் தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆகவே கண்மாய் மற்றும் கால்வாய் பகுதிகளை முறைப்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை