உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய குழு அமைக்க விண்ணப்பம் வழங்கல்

புதிய குழு அமைக்க விண்ணப்பம் வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காங்., கட்சி சார்பில் புதிய குழு அமைக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.தனியார் மகாலில் நடந்த கூட்டத்திற்கு பொறுப்புக்குழுத்தலைவர் கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜாராம் பாண்டியன், செல்லத்துரை அப்துல்லா,தெய்வேந்திரன், அகில இந்திய மீனவர் பிரிவு தேசிய தலைவர் ஆம்ஸ்டிராங், மகிளா காங்., மாவட்ட தலைவி ராமலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர் எம்.பி., தொகுதியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னாள் எம்.பி., ராமசுப்பு, ராமநாதபும் எம்.பி., தொகுதியின் ஒருங்கிணைப்பாளர்இதயத்துல்லா பங்கேற்றனர்.இதில் சட்டசபை வாரியாக தொகுதிக்கு 3 பேர் கொண்ட குழு புதிதாக அமைக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் காங்., கட்சி சார்பில் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை