மின்தடையால் அவதி
சாயல்குடி:சாயல்குடி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக மதியம், மாலை நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். பேரூராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். வீடு, வணிக வளாகங்கள், கடைகளில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். சாயல்குடி துணை மின் நிலையத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.