உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நில அளவையர்கள் ஸ்டிரைக் அலுவலக பணிகள் பாதிப்பு

 நில அளவையர்கள் ஸ்டிரைக் அலுவலக பணிகள் பாதிப்பு

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நில அளவை அலுவலர்கள் ஸ்டிரைக்கால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நில அளவை சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களப்பணியாளர்கள் பணிச்சுமையை போக்கி பணிகளை முறைப்படுத்துதல், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீண்டும் வழங்குதல், ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலுமாக கைவிடுதல், நில அளவர் பணியிடங்களை நிரப்பி, ஊதிய முரண்பாடுகளை களைதல், வட்டம், குறுவட்டம், நகர சார் ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். திருவாடானை தாலுகாவில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட பத்திரங்களில் இருந்து உரிமையாளர்களுக்கு பட்டா மாறுதல் உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ