உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழக ஹாக்கி அணி பயிற்சிநிறைவு: வழி அனுப்பும் விழா

தமிழக ஹாக்கி அணி பயிற்சிநிறைவு: வழி அனுப்பும் விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலுமாணிக்கம் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில்பயிற்சியை நிறைவு செய்த தமிழக மகளிர் ஹாக்கி அணியினரை தேசிய ஹாக்கி போட்டிக்கு பஞ்சாப் செல்ல வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு கழகம் சார்பில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஜன.5 முதல் 11 வரை தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணிக்கு ராமநாதபுரம் வேலுமாணிக்கம் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் டிச.27 முதல் பயிற்சி அளிக்கப்பட்டது.நேற்று பயிற்சி முடித்த தமிழக அணி வீரங்கானைகளை பஞ்சாப் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், அணி மேலாளர் ரமேஷ், பயிற்சியாளர் மணிகண்டன், தாமரைக்கண்ணன், காயத்ரி, மாவட்ட ஹாக்கி சங்க செயலளர் கிழவன் சேதுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை