உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழில்நுட்ப கருத்தரங்கு

தொழில்நுட்ப கருத்தரங்கு

கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாநில முழுவதும் உள்ள தொழில்நுட்ப சம்மேளனம் சார்பில், டெக்னோவா - 2024 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். முதலாம் ஆண்டு துறை தலைவர் உமையாள் வரவேற்றார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. செய்யது ஹமீதா கலை-அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர், இன்ஜினியரிங் கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார் பங்கேற்றனர். மின்னணுவியல் துறையின் தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை