உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கீழ்பனையூர் ராக்காச்சி அம்மன், சோனையா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக அனுக்ஞை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணா குதி, இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், நாடி சந்தானம், கடம் புறப்பாடு நடைபெற்று யாகசாலை பூஜையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை