உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இருளில் மூழ்கிய கிழக்கு கடற்கரை சாலை பாலம் இருளில் மூழ்கிய கிழக்கு கடற்கரை சாலை பாலம்

இருளில் மூழ்கிய கிழக்கு கடற்கரை சாலை பாலம் இருளில் மூழ்கிய கிழக்கு கடற்கரை சாலை பாலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது. ராமநாதபுரம் புறநகர் பகுதி வழியாக கீழக்கரை செல்லும் பாலத்தில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வரு கின்றன. கடந்த சில மாதங்களாக பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் பாலம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பாலத்தில் ஏறும் போது மறுமுனையில் வரும் வாகனங்கள், தடுப்புகள் தெரிவதில்லை. பாலத்தில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி மக்கள் இருளில் பாலத்தில் அச்சத்துடன் செல்கின்றனர். கடந்த ஆண்டு பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்ட நிலையில் விஷமிகள் மின் விளக்குகள், சுவிச் பாக்ஸ்களை திருடிச் சென்ற நிலையில் தற்போது இருளில் மூழ்கியுள்ளது. விஷமிகள் மீது புகார் அளித்து பாலத்தில் மீண்டும் மின் விளக்குகளை ஒளிர செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை