மேலும் செய்திகள்
கல்லுாரி சந்தையில் மாணவியர் ஆர்வம்
10-Jul-2025
கீழக்கரை: கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லுாரி சந்தை ஆக., 5 முதல் 7 வரை மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது. முதல்வர் சுமையா தலைமை வகித்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட உதவி மேலாளர் தங்கபாண்டியன், மாவட்ட வள பயிற்றுனர் ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர். இக்கல்லுாரி சந்தையில் 32 கடைகளை 40 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அமைத்திருந்தனர். இதில் பெண்களுக்கான பேன்ஸி பொருட்கள், சிறுகுறு தானியங்கள் உட்பட பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் பெண்கள் அதிகளவு பயன்படுத்தக்கூடிய கலை நயப்பொருட்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை கல்லுாரி மாணவிகள் பங்கேற்று உற்பத்தி விலைக்கு பொருள்களை பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் சேக் தாவூத் கான் மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
10-Jul-2025