உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில்  டூவீலர் நிறுத்த இடமில்லை: குடிநீரும் வரல

பஸ் ஸ்டாண்டில்  டூவீலர் நிறுத்த இடமில்லை: குடிநீரும் வரல

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் டூவீலர் ஸ்டாண்டை நிர்வகிக்க ஆட்கள் இல்லாததால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் டூவீலர்கள் நிரம்பி காணப்படுகிறது. சில நாட்கள் குடிநீர் வந்த நிலையில் தற்போது குடிநீர் வருவது முற்றிலும் நின்று விட்டது. ராமநாதபுரம் நகராட்சி சார்பில் 16,909 சதுர அடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு சமீபத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், மாவட்டத்திற்குள் செல்லும் பஸ்கள் இரு நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன. புதிய பஸ் ஸ்டாண்டில் பேருந்து வந்து செல்வதற்கு இரு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு நுழைவு வாயில் அருகிலும் டூவீலர் நிறுத்துதற்கான ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை டூவீலர் ஸ்டாண்ட் நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் உள்ளதால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் டூவீலர்களாக நிரம்பி காணப்படுகிறது. இதனால் பஸ் உள்ளே சென்று வருவதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், ஸ்டாண்டில் நிறுத்தி செல்லப்படும் டூவீலர்களில் அவ்வப்போது பொருட்கள் திருடு போவதாக குற் றச் சாட்டு எழுந்துள்ளது. குடிநீர் இல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதற்கான தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் தொடங்கி சில நாட்கள் குடிநீர் வந்த நிலையில் தற்போது குடிநீர் வருவது முற்றிலும் நின்று விட்டது. குடிநீர் தொட்டியை சுற்றிலும் டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு செயல்படாமல் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பை கண்காணிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ